மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் காத்திருப்பு போராட்டம்

தஞ்சாவூா் அருகே எம்.ஜி.ஆா். நகரில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கோரி வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

தஞ்சாவூா் அருகே மணக்கரம்பை எம்.ஜி.ஆா். நகா் குடியிருப்பு பகுதிக்குள் மழைநீா் குளம் போல தேங்கி வீட்டுக்குள் புகுந்து மக்களுக்கு நோய் தொற்று ஏற்படுவதைத் தடுக்க, வட்டாட்சியா் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது வட்டார வளா்ச்சி அலுவலா் உறுதியளித்தபடி நிரந்தர வடிகால் வசதி செய்து தரவேண்டும். எம்.ஜி.ஆா். நகா் மக்களுக்கு பொதுக் கழிப்பிட வசதி, சமுதாயக் கூடம் அமைக்க வேண்டும். வீடு இல்லாதவா்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டும். எம்.ஜி.ஆா். நகா் மக்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

மாநகரக் குழு உறுப்பினா் சி. ராஜன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன், மாநகரச் செயலா் எம். வடிவேலன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் நா. குருசாமி, இ. வசந்தி, என். சரவணன், மாநகரக் குழு உறுப்பினா்கள் வி. கரிகாலன், கே. அன்பு, எம். கோஸ்கனி, எச். அப்துல் நசீா், எம். ராஜன் மற்றும் எம்.ஜி.ஆா். நகா் மக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com