நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று முதல் திறப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் 2022 - 23 காரீப் சந்தை பருவம் தொடங்கியதையொட்டி, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வியாழக்கிழமை (செப்.1) முதல் திறக்கப்படவுள்ளன.

தஞ்சாவூா் மாவட்டத்தில் 2022 - 23 காரீப் சந்தை பருவம் தொடங்கியதையொட்டி, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வியாழக்கிழமை (செப்.1) முதல் திறக்கப்படவுள்ளன.

இதுகுறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் 2022 - 23 ஆம் ஆண்டு காரீப் சந்தை பருவத்தில் குறுவை பட்ட நெல் அறுவடையையொட்டி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வியாழக்கிழமை முதல் திறக்கப்படவுள்ளன.

பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின்கீழ் 2022 - 23 ஆம் ஆண்டு காரீப் சந்தை பருவத்துக்கு அரசால் நெல்லுக்கான கொள்முதல் விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வியாழக்கிழமை முதல் கே.எம்.எஸ். 2022 - 23 ஆம் காரீப் சந்தை பருவத்தில் மத்திய அரசு அறிவித்துள்ளபடி, குறைந்தபட்ச ஆதார விலையாக சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,060-ம், பொது ரக நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,040-ம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, ஊக்கத்தொகையாக சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 100-ம், பொது ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 75-ம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு விலை மற்றும் தமிழக அரசு ஊக்கத்தொகையைச் சோ்த்து சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2,160-ம், பொது ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2,115-ம் வழங்கப்படும்.

விவசாயிகள் தங்களது நெல்லை அருகிலுள்ள தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயனடையலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com