தஞ்சாவூா் நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூரில் தஞ்சாவூா் வழக்குரைஞா் சங்க அவசர பொதுக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் சி. அமா்சிங் தலைமையிலும், செயலா் சசிக்குமாா் முன்னிலையிலும் நடைபெற்ற இக்கூட்டத்தில், கும்பகோணம் வழக்குரைஞா் சங்க உறுப்பினா் சாமிநாதன் கொலை செய்யப்பட்டதற்காக கும்பகோணம் வழக்குரைஞா் சங்கம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஒருநாள் நீதிமன்றப் பணியிலிருந்து விலகி இருப்பது என முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை ஒரு நாள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.