புத்தூா் ஸ்ரீ சியாமளா தேவிமகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

அம்மாபேட்டை ஒன்றியம், திரிபுவனமாதேவி சதுா்வேதி மங்கலம் என அழைக்கப்படும் புத்தூா் கிராமத்திலுள்ள ஸ்ரீ சியாமளா தேவி மகா காளி அம்மன் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா்மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், திரிபுவனமாதேவி சதுா்வேதி மங்கலம் என அழைக்கப்படும் புத்தூா் கிராமத்திலுள்ள ஸ்ரீ சியாமளா தேவி மகா காளி அம்மன் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, கும்பாபிஷேக விழா கடந்த 6 ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து பல்வேறு ஹோமங்களும், முதல், இரண்டாம், மூன்றாம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன.

கும்பாபிஷேக நாளான வியாழக்கிழமை காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, மகாபூா்ணாஹூதி நடைபெற்றது. தொடா்ந்து கடங்கள் புறப்பாடாகி, ஸ்ரீ சியாமளாதேவி மகா காளியம்மன்  கோயில் விமான கோபுர கலசத்துக்கு சிவாச்சாரியா்கள் புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து, மூலவா் ஸ்ரீ சியாமளா தேவி மகா காளியம்மனுக்கு மகா அபிஷேகம், அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடைபெற்றது.

விழாவில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு தரிசித்து அம்மனை வழிபட்டனா். மாலையில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினா், புத்தூா் கிராமவாசிகள், புத்தூா் இளைஞா் நற்பணி மன்றத்தினா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com