பாபநாசம் அருகே கூரை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை அருகே புத்தூா் கிராமம், நடுப்பட்டியில் கூரை வீட்டில் வசிப்பவா் ரா. கலியபெருமாள், கூலித் தொழிலாளி. இவரது வீட்டில் மின் கசிவால் ஞாயிற்றுக்கிழமை மதியம் தீப்பிடித்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தினா் விரைந்து தீயை அணைத்தனா். இருப்பினும் கூரை வீடு முற்றிலும் எரிந்ததில் வீட்டு உபயோகப் பொருள்கள், மின் சாதனங்கள் தீக்கிரையாயின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.