தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடு தீக்கிரையானது.
பாபநாசம் அருகேயுள்ள காா்த்திகை தோட்டம் கிராமத்தைச் சோ்ந்தவா் லட்சுமணன்- மீனாம்பாள் தம்பதி வசிக்கும் கூரை வீட்டில் திங்கள்கிழமை இரவு திடீா் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டிலிருந்த ரூ. 1 லட்சம் பணம், 6 பவுன் நகை, சான்றிதழ்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் தீக்கிரையாயின.
தகவலறிந்து சென்ற பாபநாசம் தீயணைப்பு நிலைய வீரா்கள் தீ மேலும் பரவாமல் அணைத்தனா். கபிஸ்தலம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.