உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டப்பட்ட இந்த கோயில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடக்கலைக்கும் - சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த கோயிலை காண தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கோவிலை கண்டு ரசித்து செல்கின்றனர்.
பெரிய கோவில் தொல்லியல் துறை, தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் என மூன்று நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மூன்று நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தும் கோவிலில் எந்த ஒரு அடிப்படை வசதிகள் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது கடுமையான வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், பெரிய கோவிலின் கட்டிடக்கலையும் - சிற்பக்கலையும் நின்று ரசிக்க முடியவில்லை என கூறுகின்றனர்.
முதியவர்கள், குழந்தைகள் கோயிலில் நடக்க முடியாமல் சுடும் வெயிலில் ஓடுவதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான கழிவறை வசதிகள் குடிநீர் வசதி என எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை என கூறும் சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானக்னோர் வந்து செல்லும் கோவிலுக்கு உரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாதுகாப்பு அறைக்கு கொண்டுசெல்லப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்!
தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டியில் முதல்முறையாக பெண் எம்எல்ஏக்கள் தோ்வு

சென்னை ரயில்வே கோட்டத்தில் 20 புதிய வாகன நிறுத்துமிடங்கள்

பென்னாகரத்தில் 12 மி.மீ. மழை
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


