கும்பகோணம்: ஒப்பிலியப்பன் கோயிலில் குடமுழுக்கு விழா

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன் கோவில் வேங்கடாசலபதி சுவாமி கோயிலில் மகா குடமுழுக்கு விழா வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன் கோவில் வேங்கடாசலபதி சுவாமி கோயிலில் மகா குடமுழுக்கு விழா
கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன் கோவில் வேங்கடாசலபதி சுவாமி கோயிலில் மகா குடமுழுக்கு விழா

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன் கோவில் வேங்கடாசலபதி சுவாமி கோயிலில் மகா குடமுழுக்கு விழா வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

தமிழக திருப்பதி என அழைக்கப்படும் இக்கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இக்கோயில் பூலோக வைகுந்தம், திருவிண்ணகர் என போற்றப்படுகிறது. இத்தலம் திருவேங்கடம் என்றும், திருப்பதியைப் போலவே பல்வேறு வகைகளில் பெரியதொரு பிரார்த்தனை தலமாகவும் விளங்கி வருகிறது.

இக்கோயிலில் விமானங்கள், கோபுரங்கள், பிரகாரங்கள், சிறு சன்னதிகள் ஆகியவற்றில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன. இத்திருப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, குடமுழுக்கு விழா ஜூன் 25 ஆம் தேதி தொடங்கியது.

இதில், காலையில் புண்யாஹவாசனம், ஸ்ரீசுதர்சன ஹோமம், வேத, திவ்யப்பிரபந்த, ஸ்ரீபாஷ்யாதிக்ரந்த பாராயணம் ஆகியவை நடைபெற்றன. மாலையில் முதல் கால யாக பூஜைகள் தொடங்கி, பூர்ணாஹூதியுடன் நிறைவடைந்தது.

தொடர்ந்து, ஜூன் 26 காலை இரண்டாம் கால யாக பூஜைகள், மாலை மூன்றாம் கால யாக பூஜைகள், 27 ஆம் தேதி நான்காம் கால யாக பூஜைகள், மாலை ஐந்தாம் கால யாக பூஜைகள், புதன்கிழமை காலை ஆறாம் கால யாக பூஜைகள், மாலை ஏழாம் கால யாக பூஜைகள் ஆகியவை நடைபெற்றன.

இதைத்தொடர்ந்து, வியாழக்கிழமை காலை புண்யாஹவாசனம், திருவாராதனம், ஹோமங்கள், யாத்ராதானம், பஞ்ச, தச தானங்கள், கடம் புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்றன. தொடர்ந்து, காலை 9 மணி முதல் 10 மணிக்குள் விமான மற்றும் மூலவர் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

பின்னர், ஆராதனம், சாற்றுமுறை, ப்ரஹ்மகோஷம், ஆசீர்வாதம், யஜமான ஆச்சார்ய மரியாதை, பொது ஜன சேவை, இரவு 7 மணிக்கு பெருமாள் தாயார் தங்க கருட சேவை, திருவீதி புறப்பாடு ஆகியவை நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com