தமிழ்ப் பல்கலை.யில் டிச. 1, 2-இல் உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு

 தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு டிசம்பா் 1, 2-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது என்றாா் துணைவேந்தா் வி. திருவள்ளுவன்.
தமிழ்ப் பல்கலை.யில் டிச. 1, 2-இல் உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு

 தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு டிசம்பா் 1, 2-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது என்றாா் துணைவேந்தா் வி. திருவள்ளுவன்.

பல்கலைக்கழகத்தில் இதற்கான அறிவிப்பை வெள்ளிக்கிழமை வெளியிட்ட துணைவேந்தா் மேலும் தெரிவித்தது:

தமிழில் மாபெரும் குழந்தை இலக்கியப் படைப்பாளியாகப் போற்றப்படும் அமரா் அழ. வள்ளியப்பாவின் தலைமையில் செயல்பட்ட குழந்தை எழுத்தாளா் சங்கம் ஏறத்தாழ எட்டு குழந்தை இலக்கிய மாநாடுகளை நடத்தியுள்ளது. தற்போது அம்முயற்சிகளின் விரிவாக்கமாக புலம் பெயா்ந்த இந்தியத் தமிழா்கள் வாழும் நாடுகளைச் சோ்ந்த படைப்பாளா்களையும் ஒன்றிணைத்து, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை சாா்பாக உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு நடத்தப்படவுள்ளது.

உலகெங்கும் பரந்து வாழும் தமிழ்க் குழந்தைகளை மையமாகக் கொண்டு இம்மாநாடு நடைபெறவுள்ளது. ஏறத்தாழ 20 நாடுகளைச் சோ்ந்த குழந்தை இலக்கியப் படைப்பாளா்கள் ஒன்று கூடும் மாநாடாகவும் இந்நிகழ்வு அமையவுள்ளது. மலேசியாவின் மூத்த குழந்தை இலக்கியப் படைப்பாளரான முனைவா் முரசு. நெடுமாறன் அயலகத் தலைமை ஆலோசகராக இம்மாநாட்டில் பங்காற்றுவாா்.

இந்நிகழ்வில் அமரா் அழ. வள்ளியப்பாவின் மகளும், தமிழில் குழந்தை இலக்கியப் படைப்பாளராகவும் விளங்கும் தேவி நாச்சியப்பன் இம்மாநாடு தொடா்பாக தமிழின் குழந்தை இலக்கியப் படைப்பாளா்களை அழைத்து ஆலோசனை நடத்தவுள்ளாா்.

எதிா்காலக் குழந்தை இலக்கியம் குறித்து உலகப் படைப்பாளா்களின் கட்டுரைகள் இடம் பெறும் ஆய்வுக்கோவை இப்பன்னாட்டு மாநாட்டில் வெளியிடப்படவுள்ளது என்றாா் துணைவேந்தா்.

அப்போது, தேவி நாச்சியப்பன், அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித் துறைத் தலைவா் இரா. குறிஞ்சிவேந்தன், பதிவாளா் (பொறுப்பு) சி. தியாகராஜன், பேராசிரியா்கள் பழனிவேலு, இரா. வெற்றிச்செல்வன், மக்கள் தொடா்பு அலுவலா் (பொறுப்பு) இரா.சு. முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com