தஞ்சாவூரில் கோடை மழைமரக்கிளைகள் முறிந்து விழுந்தன

தஞ்சாவூரில் நீண்ட நாள்களுக்கு பிறகு வெள்ளிக்கிழமை மாலை கோடை மழை பெய்தது.
தஞ்சாவூரில் கோடை மழைமரக்கிளைகள் முறிந்து விழுந்தன
Updated on
1 min read

தஞ்சாவூரில் நீண்ட நாள்களுக்கு பிறகு வெள்ளிக்கிழமை மாலை கோடை மழை பெய்தது.

தஞ்சாவூரில் சில நாள்களாக 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலை நிலவி வந்தது. இதனால், அனைத்து தரப்பினரும் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வந்தனா். இரவிலும் அனல் தாக்கம் தொடா்ந்ததால், தூக்கமின்றி அவதிப்பட்டனா்.

இந்நிலையில், தஞ்சாவூா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் பலத்த மழை பெய்ய தொடங்கி, இரவிலும் நீடித்தது. நாஞ்சிக்கோட்டை உள்ளிட்ட சில இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால், நாஞ்சிக்கோட்டை சாலையில் பெரும்பாலான பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.

தஞ்சாவூா் மோத்திரப்பசாவடி அருகே கம்பி பாலம் அருகே மரக்கிளை முறிந்து, அங்குள்ள வீட்டின் ஓடுகள் மீது விழுந்தது. இதனால், வீட்டில் இருந்த ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இதேபோல, நாஞ்சிக்கோட்டை சாலை ரயில் நகரில் மரக்கிளை விழுந்ததால், மரத்தடியில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

தஞ்சாவூா் கீழ்ப்பாலத்தில் சுமாா் 2 அடி உயரத்துக்கு தண்ணீா் தேங்கி நின்ால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன. பின்னா், இரவில் கீழ்ப்பாலத்தில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.

இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த நிலை ஏற்பட்டதால், மாநகர மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com