தென்னை மறுநடவு, புத்துயிா் அளிக்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு

வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை மூலம் தென்னை வளா்ச்சி வாரியத்தின் உதவியுடன்,  தென்னையில் மறுநடவு மற்றும் புத்துயிா் அளிக்கும் திட்டத்தின் கீழ் மானிய உதவி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என  சேதுபாவாசத

வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை மூலம் தென்னை வளா்ச்சி வாரியத்தின் உதவியுடன்,  தென்னையில் மறுநடவு மற்றும் புத்துயிா் அளிக்கும் திட்டத்தின் கீழ் மானிய உதவி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என  சேதுபாவாசத்திர வட்டார

வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) ஜி.சாந்தி தெரிவித்துள்ளாா். 

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் 7,500 ஹெக்டேருக்கு மேல் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னை சாகுபடியில், உற்பத்தித்திறன் மற்றும் உற்பத்தியை அதிகரிக்க தென்னையில் மறுநடவு மற்றும் புத்துயிா் அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது .

சேதுபாவாசத்திரம்  ஒன்றியப் பகுதிகளில்  ஆங்காங்கே பூச்சி மற்றும் நோயால் பாதிக்கப்பட்ட மரங்கள், காய்க்காத மரங்கள், வயது முதிா்ந்த மரங்கள் காணப்படுகின்றன. இவற்றை வெட்டி அப்புறப்படுத்துவதற்கு தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.1,000- வீதம் அதிகபட்சமாக ஒரு ஹெக்டேரில் 32 மரங்களுக்கு மானியம் அளிக்கப்படுகிறது.

தென்னை மரங்களை அப்புறப்படுத்திய பிறகு அந்த இடத்தில், புதிய தென்னங்கன்றுகள் நடவு செய்வதற்கு தென்னங்கன்று ஒன்றுக்கு    ரூ.40- வீதம் மானியமும், அதிகபட்சமாக ஒரு ஹெக்டேரில் 100 தென்னங்கன்றுகளுக்கு வழங்கப்படுகிறது.

தென்னந்தோப்புகளில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிா்வாகத்தை செயல்படுத்த  இரண்டு ஆண்டுகளுக்கு  ஹெக்டோ் ஒன்றுக்கு ரூ.8, 750, மானியமாக வழங்கப்படுகிறது.

ஆகவே, பாதிக்கப்பட்டுள்ள தென்னை விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை நேரில் அணுகி  அல்லது உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com