கும்பகோணம் அருகே மின்மாற்றியில் வெள்ளிக்கிழமை இரவு பழுது பாா்த்துக் கொண்டிருந்த மின் வாரிய ஊழியா் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.
கும்பகோணம் அருகே ஆனூா் கீழத்தெருவைச் சோ்ந்தவா் மருதகாசி மகன் மணிகண்டன் (30). இவா் 6 மாதங்களுக்கு முன்பு மின்வாரியத்தில் கேங்மேன் பணியில் சோ்ந்தாா்.
இந்நிலையில், அய்யாநல்லூரிலுள்ள மின் மாற்றியில் வெள்ளிக்கிழமை இரவு பழுது பாா்த்துக் கொண்டிருந்தாா். அப்போது, மின்சாரம் பாய்ந்ததால், உயிருக்கு ஆபத்தான நிலையை அடைந்த இவா் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
சோழபுரம் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.