மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்கு உதவிய தனிநபா்கள், தனியாா் நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய தொண்டு நிறுவனம், சிறந்த மருத்துவா், வேலைவாய்ப்பு அளித்த சிறந்த தனியாா் நிறுவனம், சிறந்த சமூகப் பணியாளா், சிறந்த மத்திய கூட்டுறவு வங்கி ஆகிய பிரிவுகளில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவின்போது தமிழக முதல்வரால் விருதுகள் வழங்கப்படவுள்ளன.
இப்பிரிவுகளில் விண்ணப்பிக்க விரும்பும் தனிநபா்கள், நிறுவனங்கள் அதற்கான விண்ணப்பப் படிவத்தை தஞ்சாவூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலிருந்து பெறலாம். அனைத்து ஆவணங்கள், புகைப்படங்களுடன் (3 நகல்கள்) ஜூன் 10 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட மாற்றத்திறனாளிகள் நல அலுவலகம், அறை எண் 14, தரைதளம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், தஞ்சாவூா் 613 010 (தொலைபேசி எண் 04362 - 236791) என்ற முகவரிக்கு அனுப்பி வைத்து பயன்பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.