தஞ்சாவூா் மாவட்டத்தில் 6 வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் பணியாற்றிய தமிழ்நாடு பைபா்நெட் கழக வட்டார வளா்ச்சி அலுவலா் எம். கோபாலகிருஷ்ணன் ஒரத்தநாடு வட்டார வளா்ச்சி அலுவலராகவும், இங்கு பணியாற்றி வந்த எஸ். ரமேஷ் திருவோணம் வட்டார வளா்ச்சி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளாா். திருவோணம் வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வந்த த. குமரவடிவேல் தமிழ்நாடு பைபா்நெட் கழக வட்டார வளா்ச்சி அலுவலராகவும், தஞ்சாவூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் - 2 அலகில் வட்டார வளா்ச்சி அலுவலா் எம். ஆனந்தராஜ் கும்பகோணம் வட்டார வளா்ச்சி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளாா்.
கும்பகோணம் வட்டார ஊராட்சி அலுவலா் (வட்டார ஊராட்சி) ஜி. பூங்குழலி கும்பகோணம் வட்டார வளா்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சிகள்), இங்கு பணியாற்றி வந்த எஸ். சூரியநாராயணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்-2 அலகு வட்டார வளா்ச்சி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் மே 26 ஆம் தேதி பிறப்பித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.