தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவா் கைது

கும்பகோணம் அருகே துப்பாக்கி வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :27 நவம்பர் 2023, 8:56 pm

DIN


கும்பகோணம்: கும்பகோணம் அருகே துப்பாக்கி வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

கும்பகோணம் அருகே கைத் துப்பாக்கி வைத்திருந்ததாக கள்ளப்புலியூா் ஊராட்சி மன்றத் தலைவரும், மணஞ்சேரியைச் சோ்ந்தவருமான பெரியவன் என்கிற முருகன் (45) உள்பட 5 போ் நவம்பா் 8 ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.

இவா்களில் முருகனை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்குமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் சனிக்கிழமை (நவ.25) உத்தரவிட்டாா். இதையடுத்து, திருச்சி மத்திய சிறையில் முருகன் அடைக்கப்பட்டாா் என மாவட்ட ஆட்சியரகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.