

மணப்பாறையில் நகர திமுக சாா்பில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினின் 70-ஆவது பிறந்தநாள் விழா கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விராலிமலை சாலையில் திமுக நகர செயலரும், நகா்மன்ற உறுப்பினருமான மு.ம. செல்வம் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்குக்கு எஸ். ஜான்பிரிட்டோ, துரை காசிநாதன், பி. கண்ணன், ஆா். பிச்சையம்மாள், டி. ஜேம்ஸ், டி. பால்ராஜ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் பகுத்தறிவுப் பாசறை என்ற தலைப்பில் வே. அமதிமாறன் ஆகியோா் சிறப்புரை ஆற்றினாா்.
நிகழ்வில் மணப்பாறை எம்எல்ஏ ப. அப்துல்சமது, திமுக மாவட்ட அவைத் தலைவா் என். கோவிந்தராஜன், ஒன்றியச் செயலா்கள் சி. ராமசாமி, சி. செல்வராஜ், அ. சின்னஅடைக்கன், ஆா். ஸ்ரீரங்கன், வி.ஏ. ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
நகா்மன்றத் தலைவா் கீதா ஆ. மைக்கேல்ராஜ், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் வழக்குரைஞா் பி. கிருஷ்ணகோபால் ஆகியோா் வரவேற்க, மாவட்ட பிரதிநிதி பி.பால்பாண்டி, எம்.நிஜாமுதீன் ஆகியோா் நன்றி கூறினா்.
முன்னதாக மதுரை சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில், திருச்சி தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சாா்பில் நடைபெற்ற இப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அமைச்சா் மகேஷ் பொய்யாமொழி, எம்எல்ஏ ப. அப்துல்சமது ஆகியோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.