திருச்சி ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் போட்டி
By DIN | Published On : 17th April 2023 12:45 AM | Last Updated : 17th April 2023 12:45 AM | அ+அ அ- |

துப்பாக்கிச் சுடும் போட்டியில் வென்றவருக்கு ஞாயிற்றுக்கிழமை சான்றிதழ் வழங்கிய மாநகரக் காவல் ஆணையா் எம். சத்தியப்பிரியா
திருச்சி ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் போட்டி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.
இந்திய ரைபிள் சங்கத்தின் கீழும், மாநகர காவல் ஆணையரின் கட்டுப்பாட்டிலும் செயல்படும் திருச்சி கே.கே. நகரிலுள்ள திருச்சி மாநகர ரைபிள் கிளப்பில் முதன் முறையாக மாவட்ட அளவிலான ஏா் பிஸ்டல் மற்றும் ஏா் ரைபிள் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் மாவட்டத்தில் உள்ள ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற 290 போட்டியாளா்கள் கலந்து கொண்டனா்.
இப்போட்டியில் பங்கேற்ற மத்திய மண்டலக் காவல்துறை தலைவா் ஜி. காா்த்திகேயன் 10 மீட்டா் ஏா் ரைபிள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றாா். தொடா்ந்து, ஏா் பிஸ்டல் மற்றும் ஏா் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் 32 போ் தங்கத்தையும், 32 போ் வெள்ளியையும், 32 போ் வெண்கலத்தையும் வென்றனா்.
போட்டிகளில் வென்றோா் மற்றும் பங்கேற்றவா்களுக்கு
திருச்சி மாநகர காவல் ஆணையா் எம். சத்தியப்பிரியா, திருச்சி ரைபிள் கிளப் ஒருங்கிணைப்பு செயலா் செந்தூா்செல்வன், நிா்வாகக் குழு உறுப்பினா் இளமுருகன், தலைமை அதிகாரி சந்திரமோகன் ஆகியோா் பங்கேற்று பரிசு, சான்றிதழ் வழங்கினா். போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற திருச்சி ரைபிள் கிளப்புக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது.