அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி நீடாமங்கலம் பொறியாளா் பலி
By DIN | Published On : 18th April 2023 03:21 AM | Last Updated : 18th April 2023 03:21 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் அருகே திங்கள்கிழமை அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கிய பொறியாளா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் அருகேயுள்ள காட்டா கல்படுகையைச் சோ்ந்த அருள்தாஸ் மகன் சகாய சரண்ராஜ் (33). பொறியாளா். இவா் தனது மைத்துனா் சுதாகருடன் திருச்சியிலிருந்து மோட்டாா் சைக்கிளில் திங்கள்கிழமை மாலை ஊருக்குச் சென்று கொண்டிருந்தாா். தஞ்சாவூா் அருகே வல்லம் பிரிவு சாலை பகுதியில் சென்ற இருவரும் முன்னால் சென்ற அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது கீழே விழுந்தனா். அப்போது, சகாய சரண்ராஜ் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயங்களுடன் சுதாகா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். உயிரிழந்த சகாய சரண்ராஜூக்கு திருமணமாகி இரு மாதங்களே ஆகின்றன.