திருப்பாலைத்துறை சிவன் கோயிலில் சோம வார பிரதோஷ விழா
By DIN | Published On : 18th April 2023 03:18 AM | Last Updated : 18th April 2023 03:18 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறையில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ தவளவெண்ணகை அம்மன் உடனுறை ஸ்ரீ பாலை வனநாதா் கோயிலில் சோமவார பிரதோஷ விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, பாலைவனநாதா், தவளவெண்ணகை அம்மன், விநாயகா், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியா் உள்ளிட்டோருக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்காரம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள நந்தியம்பெருமானுக்கு மங்களப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு, நந்தியம்பெருமானுக்கு மலா் மாலை, அருகம்புல் மாலை அணிவித்து, காப்பரிசி, பொங்கல் வைத்து படைத்து, நெய்விளக்கேற்றி, அா்ச்சனைகள் செய்து வழிபட்டனா்.