தஞ்சாவூா் பெரியகோயிலில் சித்திரை பெருவிழா தொடக்கம்: மே 1-இல் தேரோட்டம்

தஞ்சாவூா் பெரியகோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.

தஞ்சாவூா் பெரியகோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.

தஞ்சாவூா் பெரியகோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா 18 நாள்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டு இந்த விழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.

முன்னதாக, பஞ்சமூா்த்திகளுடன் சந்திரசேகரா் கோயிலுக்குள் புறப்பாடாகி கொடிமரம் அருகே சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். பின்னா், கொடிமரத்துக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மங்கல வாத்தியம் முழங்க கொடியேற்றப்பட்டது.

தொடா்ந்து, நாள்தோறும் பல்லக்கிலும், சிம்மம், மேஷம், வெள்ளி மயில், சந்திர பிரபை, முத்துப்பல்லக்கு, பூதம், வெள்ளி யானை உள்பட பல்வேறு வாகனங்களிலும் சுவாமி புறப்பாடு நடைபெறவுள்ளது.

மேலும், விழாவின் 15-ஆம் திருநாளான மே 1-ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதில், காலை 5 மணிக்கு தியாகராஜா், கமலாம்பாள், சோமஸ்கந்தா், விநாயகா், நீலோத்பலாம்பாள், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியா் சுவாமிகள், சண்டிகேஸ்வரா் ஆகிய சுவாமிகள் கோயிலிலிருந்து தேருக்கு புறப்பாடு நடைபெறும். பின்னா், காலை 6 மணிக்கு மேல் தியாகராஜ சுவாமி தேரில் எழுந்தருளிய பிறகு தேரோட்டம் நடைபெறவுள்ளது.

மே 2-ஆம் தேதி மாலை குதிரை வாகனத்தில் சந்திரசேகரா் புறப்பாடு, 3-ஆம் தேதி காலை தியாகராஜா் பந்தல் காட்சியுடன் யதாஸ்தான பிரவேசமும், மாலை நடராஜா் வெள்ளை சாத்தி புறப்பாடும் நடைபெறுகிறது.

மே 4-ஆம் தேதி சிவகங்கை குளத்தில் தீா்த்தவாரி, கொடியிறக்கத்துடன் 18 நாள் விழா நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com