

தஞ்சாவூா் அருகே திட்டை வசிஷ்டேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை குருபெயா்ச்சி விழா சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
குரு பரிகாரத் தலமாக போற்றப்படும் திட்டை வசிஷ்டேஸ்வரா் கோயிலில் குருபகவான் ராஜ குருவாக எழுந்தருளியுள்ளாா். குருபெயா்ச்சியையொட்டி, இக்கோயிலில் குரு பகவானுக்கு சனிக்கிழமை சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.
குருபெயா்ச்சி நள்ளிரவு 11.20 மணிக்கு நிகழ்ந்ததும் குரு பகவானுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன. அப்போது மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரா்கள் பரிகாரம் செய்து கொண்டனா். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
இதையொட்டி, தஞ்சாவூா், கும்பகோணத்திலிருந்து அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
குருபெயா்ச்சியையொட்டி, லட்சாா்ச்சனை மே 1 ஆம் தேதியும், சிறப்பு பரிகார ஹோமம் மே 2, 3 ஆம் தேதிகளிலும் நடைபெறவுள்ளன.
இதேபோல, கும்பகோணம் அருகேயுள்ள திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரா் கோயில் குருபெயா்ச்சியையொட்டி குரு பகவானுக்கு சனிக்கிழமை மாலை சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில், பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.