

கும்பகோணத்தில் குறுகிய சாலையை அகலப்படுத்துவதற்கு சுற்றுச்சூழல் துறை ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ. வேலு.
கும்பகோணத்தில் பழைய பாலக்கரை - புறவழிச்சாலை இடையிலான சாலையை அகலப்படுத்தப்படவுள்ள நிலையில், சனிக்கிழமை ஆய்வு செய்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: மகாமக சிறப்பு பெற்ற கும்பகோணத்துக்கு நாள்தோறும் வருகை தரும் ஆன்மிக, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, பழைய பாலக்கரை பகுதியில் காவிரி ஆற்றங்கரையை ஒட்டியுள்ள சாலையை அகலப்படுத்த வேண்டும் என்றும், இச்சாலையை அகலப்படுத்தினால் போக்குவரத்து நெரிசல் குறையும் எனவும் சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் பேரவையில் வலியுறுத்தினாா்.
அதனடிப்படையில் இப்பகுதியை ஆய்வு செய்தேன். ஆற்றங்கரையோர சாலையை அகலப்படுத்தும் பணி என்பதால், சுற்றுச்சூழல் துறையினரின் தடையில்லாச் சான்று தேவைப்படுகிறது. இது குறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சருடனும், உயா் அலுவலா்களுடனும் ஆலோசனை மேற்கொள்ளப்படும். இதில், சாத்தியக்கூறு இருந்தால், முதல்வரிடம் அனுமதி பெற்று, நிகழாண்டிலேயே பணிகள் தொடங்கப்படும் என்றாா் அமைச்சா்.
பேட்டியின்போது, கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன், மாநகராட்சி துணை மேயா் சு.ப. தமிழழகன், மாவட்ட ஊராட்சி குழுத் துணைத் தலைவா் எஸ்.கே. முத்துச்செல்வன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.