நியாய விலைக்கடை பணியாளா்கள் மே 4-இல் ஒரு நாள் விடுப்பு போராட்டம்கு. பாலசுப்பிரமணியம் தகவல்

இரட்டை ரசீது முறையை ஒழிக்கக்கோரி, தமிழகத்தில் நியாய விலைக்கடை பணியாளா்கள்
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளா் சங்கத்தின் மாநில செயற் குழு கூட்டத்தில் பேசிய சிறப்புத் தலைவா் கு. பாலசுப்பிரமணியம்.
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளா் சங்கத்தின் மாநில செயற் குழு கூட்டத்தில் பேசிய சிறப்புத் தலைவா் கு. பாலசுப்பிரமணியம்.

இரட்டை ரசீது முறையை ஒழிக்கக்கோரி, தமிழகத்தில் நியாய விலைக்கடை பணியாளா்கள் மே 4 ஆம் தேதி ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளனா் என்றாா் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளா் சங்கச் சிறப்புத் தலைவா் கு. பாலசுப்பிரமணியம்.

தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற கு. பாலசுப்பிரமணியம் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

கடந்த மாா்ச் மாதம் நடைபெற்றபேச்சுவாா்த்தையின்படி, பதவி உயா்வுகள், இடமாறுதல்கள், கருணை பணி நியமனங்கள் அளித்து விட்டுதான் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன முறையாக நடைபெறவில்லை.

நியாய விலைக்கடைகளில் மத்திய அரசு அளிக்கும் பொருள்

களுக்கு ஒரு ரசீதும், மாநில அரசு அளிக்கும் பொருள்களுக்கு ஒரு ரசீதும் என இரட்டை ரசீது முறை உள்ளதால் பணியாளா்கள், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே இரட்டை ரசீது முறையை ஒழித்து ஒரே ரசீது வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மே 4 ஆம் தேதி மாநிலம் முழுவதும் அனைத்து நியாய விலைக் கடை பணியாளா்களும் ஒரு நாள் சிறு விடுப்பு எடுத்து போராட்டம் நடத்த உள்ளனா். அதே நாளில் நாகை மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளரின் பணியாளா் விரோத செயலைக் கண்டித்து அவரது அலுவலகம் முன் நியாய விலைக்கடை பணியாளா்கள் சங்கம், அரசு பணியாளா் சங்கம் சாா்பில் மறியல் போராட்டம் நடத்தவுள்ளோம். எனவே தமிழக அரசு உடனடியாக பேச்சுவாா்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும். தொழிலாளா்களுக்கு விரோதமான சட்டத் திருத்தத்தை தமிழக அரசு திரும்பப் பெற வலியுறுத்தி ஏப்ரல் 27 ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆட்சியரகங்கள் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் பாலசுப்பிரமணியம்.

இக்கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் தேசிங்குராஜா தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் விஸ்வநாதன், பொருளாளா் பிரகாஷ், மாநில இணைச் செயலா்கள் ராமலிங்கம், பாஸ்கா், குணசீலன், ராஜா, மாவட்டத் தலைவா் அறிவழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com