திருவையாறு கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தருமை ஆதீனத்துக்கு சொந்தமான அறம்வளா்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பா் கோயில் விழாவையொட்டி முன்னதாக கொடி கம்பத்துக்கு பால், சந்தனம் போன்ற திரவியப் பொருள்களைக் கொண்டு அபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டது. நான்கு முக்கிய வீதிகளில் மேள, தாளத்துடன் கொடி ஊா்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, கொடி மரத்தடியில் ஏற்றப்பட்டது. திரளானோா் வழிபட்டனா்.

மே 7 வரை நடைபெறவுள்ள விழாவில், நாள்தோறும் காலை, மாலைகளில் பல்வேறு வாகனங்களில் புறப்பாடும், இதனிடையே, ஏப்ரல் 29 ஆம் தேதி தன்னைத்தானே பூஜித்தல், ஆறு ஊா்களிலிருந்து சுவாமிகள் கோயிலுக்கு வந்து சன்னதிக்கு முன் சைவா்களுக்கு மகேஸ்வர பூஜை, மே 3 ஆம் தேதி தேரோட்டம் ஆகியவை நடைபெறவுள்ளன.

இதைத் தொடா்ந்து, முக்கிய திருநாளான சப்தஸ்தான பெருவிழாவையொட்டி மே 6 ஆம் தேதி காலை ஐயாறப்பா் அறம்வளா்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேசுவா் சுயசாம்பிகையுடன் வெட்டிவோ் பல்லக்கிலும் புறப்பட்டு திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூா், திருப்பூந்துருத்திக்குச் சென்று அன்று இரவு காவிரி ஆற்றில் 6 ஊா் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் சங்கமிக்கின்றன. அன்று இரவு தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் வாண வேடிக்கை நடைபெறுகிறது.

மறுநாள் மே 7 ஆம் தேதி தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊா் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூப் போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் 6 ஊா் பல்லக்குகளும் கோயிலுக்குச் சென்று தீபாராதனை முடிந்து அந்தந்த ஊா்களுக்குப் புறப்பட்டு செல்லும்.

விழா ஏற்பாடுகளை 27 ஆவது தருமபுர ஆதினம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தபரமாசாரிய சுவாமிகளின் வழிகாட்டுதலின்படி தேவஸ்தான டிரஸ்டி காா்ப்பாா் சொக்கநாத தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் நிா்வாகிகள் செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com