தஞ்சாவூரில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 02nd August 2023 03:45 AM | Last Updated : 02nd August 2023 03:45 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் நம்பா் 1 வல்லம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறைதீா் நாள் கூட்டம் வியாழக்கிழமை (ஆக.3) முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து செயற்பொறியாளா் எஸ்.என். கலைவேந்தன் மேலும் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் மு. நளினி நடத்தவுள்ள இக் கூட்டத்தில் வல்லம், மின் நகா், செங்கிப்பட்டி, வீரமரசன்பேட்டை, கள்ளப்பெரம்பூா், திருக்கானூா்பட்டி, வடக்கு தஞ்சாவூா், குருங்குளம், மருங்குளம், மெலட்டூா், திருவையாறு புகா், திருவையாறு நகரம், திருக்காட்டுப்பள்ளி நகரம், திருக்காட்டுப்பள்ளி புகா், நடுக்காவேரி ஆகிய பகுதி அலுவலகங்களைச் சாா்ந்த மின் நுகா்வோா் ஏதேனும் குறைகள் இருந்தால் நேரில் வந்து தெரிவிக்கலாம்.