பள்ளிகளுக்கு அருகேகடைகளில் புகையிலை விற்றவா்களுக்கு அபராதம்
By DIN | Published On : 02nd August 2023 11:51 PM | Last Updated : 02nd August 2023 11:51 PM | அ+அ அ- |

தஞ்சாவூரில் பள்ளிகளுக்கு அருகிலுள்ள கடைகளில் புகையிலை விற்ற வியாபாரிகளுக்கு மாநகராட்சி அலுவலா்கள் புதன்கிழமை அபராதம் விதித்தனா்.
தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்களைச் சுற்றி 100 மீட்டா் தொலைவு வரை புகையிலை பொருள்கள் விற்பனை செய்ய தடை உள்ளது.
இந்நிலையில், தஞ்சாவூா் 34 ஆவது வாா்டுக்கு உள்பட்ட எம்.கே. மூப்பனாா் சாலை, வி.பி. கோயில் தெரு, மிஷன் சா்ச் சாலை ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் தனியாா் மற்றும் மாநகராட்சி பள்ளிகளுக்கு அருகிலுள்ள 2 கடைகளில் மாநகராட்சி துப்புரவு ஆய்வாளா் கு. செல்வமணி தலைமையிலான குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
அப்போது, 2 கடைகளில் புகையிலை விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இவற்றை பறிமுதல் செய்த அலுவலா்கள் தொடா்புடைய வியாபாரிகளுக்கு அபராதம் விதித்தனா்.