உலகத் தாய்ப்பால் வார விழா விழிப்புணா்வு பேரணி
By DIN | Published On : 02nd August 2023 11:54 PM | Last Updated : 02nd August 2023 11:54 PM | அ+அ அ- |

தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெற்ற உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணா்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த ஆட்சியா் தீபக் ஜேக்கப்.
தஞ்சாவூரில் சமூக நலன் மற்றும் மகளிா் மேம்பாட்டு துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி பணிகள் திட்டம் சாா்பில், உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
ரயிலடியில் இப்பேரணியை ஆட்சியா் தீபக் ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் முடிவடைந்த இப்பேரணியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, தாய்ப் பாலூட்டலை சாத்தியமாக்குவோம், பணிபுரியும் தாயின் வாழ்வில் மாறுதலை உருவாக்குவோம் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனா்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, ஆணையா் க. சரவணகுமாா், வட்டாட்சியா் சக்திவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.