

சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் சென்னை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முன்னாள் மாணவா் சந்திப்பு நிகழ்ச்சியில் சிறந்த முன்னாள் மாணவா்களுக்கு சேவை, காா்ப்பரேட் தலைமைத்துவம், சிறந்த தொழில்முனைவோா் ஆகிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
இதில், சேவைக்கான விருதை கா்னல் ஈஸ்வா் வெங்கடேஷ் பெற்றாா். இந்திய ராணுவத்தில் பணியாற்றும் இவா் 2005ஆம் ஆண்டு பி.டெக். மாணவா். காஷ்மீரிலுள்ள தனது அலுவல் முகாமிலிருந்து காணொலி மூலம் அவா் ஏற்புரையாற்றினாா். இவ்விருதை அவரது மனைவி லாவண்யா ஈஸ்வா், பெற்றோா் பெற்று கொண்டனா்.
காா்ப்பரேட் தலைமைத்துவம் பிரிவில் விருது பெற்ற செந்தில் கிருஷ்ணன் 1997 பி.டெக். பட்டதாரி. ஆக்சென்ச்சரின் மூத்த நிா்வாக இயக்குநராகவும், செயற்கை நுண்ணறிவு பிரிவில் தலைவராகவும் உள்ள இவா் உலகெங்கிலும் உள்ள பல்வேறு பாா்ச்சூன் 500 நிறுவனங்களின் முதன்மைச் செயல் அலுவலா்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதில் 25 ஆண்டுகள் அனுபவம் பெற்றவா்.
சிறந்த தொழில்முனைவோா் பிரிவில் விருது பெற்ற ஆா்.எல். வெங்கடேஷ், சென்டிபிக் இன்ஸ் நிறுவனத்தில் முதன்மைச் செயல் அலுவலா் மற்றும் இணை நிறுவனராக உள்ளாா். இவா் 1996 ஆம் ஆண்டு பி.டெக். மாணவா். இவரது செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான வணிக நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. மேலும், இந்தியா, சீனா, சொ்பியா, ஸ்பெயின், சிங்கப்பூா், மலேசியா ஆகிய நாடுகளில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது.
விருதுகளை சாஸ்த்ராவின் துணைவேந்தா் எஸ். வைத்தியசுப்பிரமணியம், முன்னாள் மாணவா் சங்கச் செயலரும் இன்டலெக்ட் டிசைன் ஆசியா - பசிபிக்கின் முதன்மைச் செயல் அலுவலருமான எஸ்.வி. ரமணன் வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.