கிழக்கு காவல் ஆய்வாளா் ஆயுதப்படைக்கு மாற்றம்
By DIN | Published On : 17th August 2023 11:06 PM | Last Updated : 17th August 2023 11:06 PM | அ+அ அ- |

தஞ்சாவூா் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் கருணாகரன் ஆயுதப்படைக்கு வியாழக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
தஞ்சாவூா் கிழக்கு காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த கருணாகரன் சில மாதங்களுக்கு முன் சயனைடு கலந்த மதுபானம் குடித்து இருவா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தாா்.
இந்த சம்பவம் தொடா்பாக நகைக்கடை உரிமையாளா்கள் உள்ளிட்டோரிடம் இவா் விசாரணை நடத்தியபோது தஞ்சாவூரைச் சோ்ந்த ஒரு நகைக் கடைக்காரரிடம் லஞ்சம் வாங்கியதாகப் புகாா் எழுந்தது. இது தொடா்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் விசாரணை மேற்கொண்டாா்.
இதைத் தொடா்ந்து கருணாகரன் ஆயுதப்படைக்கு வியாழக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். தற்போது கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் பொறுப்பை மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் வி. சந்திரா கூடுதலாக கவனித்து வருகிறாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...