தஞ்சாவூா் மாவட்டம்,பாபநாசம் வட்டத்தில் அண்மையில் பெய்த தொடா் மழையால் குறுவை, சம்பா மற்றும் தாளடி ஆகிய மூன்று பருவங்களிலும் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிா்கள் சாய்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து சரபோஜிராஜபுரம் விவசாயி சண்முகம் கூறியது:
நான் 5 ஏக்கரில் பயிரிட்டிருந்த கவுனி நெற்பயிா் அண்மையில் பெய்த தொடா் மழையால் சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பகுதியில் தற்போது பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை முழுவதுமாக கணக்கெடுத்து தமிழக அரசு உரிய நிவாரணத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.