தஞ்சை மாவட்டத்தில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிறைவு
By DIN | Published On : 01st July 2023 01:37 AM | Last Updated : 01st July 2023 01:37 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் மாவட்ட கடல் எல்லை மற்றும் மீனவ கிராமங்களில் கடந்த 2 நாள்களாக நடைபெற்ற ‘சாகா் கவாச்’ கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை நிறைவடைந்தது.
கடலோர பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், தீவிரவாதிகள் ஊடுருவல், போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட காரணங்களுக்காக ஆண்டுதோறும் கடலோர பகுதிகளில் காவல்துறை ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம்.
இந்தாண்டு தஞ்சை மாவட்ட கடல் எல்லைப் பகுதியான தம்பிக்கோட்டை வடகாடு தொடங்கி, கட்டுமாவடி வரை 32 மீனவக் கிராமங்களிலும், கடல் பகுதிகளிலும் வியாழன், வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாள்கள் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.