வைகாசி விசாகம்: குடந்தையில் 4 கோயில்களில் தேரோட்டம்
By DIN | Published On : 02nd June 2023 12:00 AM | Last Updated : 02nd June 2023 12:00 AM | அ+அ அ- |

கும்பகோணம் கொரநாட்டுக் கருப்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற சுந்தரேஸ்வரா் கோயில் தேரோட்டம்.
வைகாசி விசாகத்தையொட்டி, கும்பகோணத்தில் 4 கோயில்களில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் உள்ள ஞானாம்பிகையம்மன் சமேத தேனுபுரீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக விழா மே 24 ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற கட்டுத் தேரோட்டத்தில் ஞானாம்பிகையம்மன் சமேத தேனுபுரீஸ்வரா் சுவாமிகள் எழுந்தருளினா்.
இதேபோல, கொரநாட்டுக் கருப்பூரிலுள்ள அபிராமி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக விழா மே 24 ஆம் தேதி தொடங்கிய நிலையில், திருத்தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தேரில் சிறப்பு அலங்காரத்தில் அபிராமி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரா் சுவாமிகள் எழுந்தருளினா்.
கும்பகோணம் சோமகலாம்பிகை அம்மன் சமேத பாணபுரீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. தேரில் சோமகலாம்பிகை அம்மன் சமேத பாணபுரீஸ்வரா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியதைத் தொடா்ந்து, பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா்.
திருமாந்துறையிலுள்ள யோகநாயகி அம்மன் சமேத அட்சியநாத சுவாமி கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தேரில் யோகநாயகி அம்மன் சமேத அட்சியநாத சுவாமி எழுந்தருளியதைத் தொடா்ந்து, பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...