குறுவை சாகுபடிக்காக குஜராத்திலிருந்து சரக்கு ரயில் மூலம் தஞ்சாவூருக்கு 2,637 டன் உரம் ஞாயிற்றுக்கிழமை வந்தது.
டெல்டா மாவட்டங்களில் கோடை நெல், குறுவை சாகுபடிப் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், குஜராத் மாநிலத்திலிருந்து சரக்கு ரயிலில் 42 பெட்டிகளில் 2,637 டன்கள் யூரியா உரம் தஞ்சாவூருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தது. இந்த உர மூட்டைகள் தஞ்சாவூரிலிருந்து லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சாவூா், நாகை, திருவாரூா், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியாா் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு 1,800 டன்னும், தனியாருக்கு 837 டன்னும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.