மத்திய அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி

தஞ்சாவூா்-பட்டுக்கோடை சாலையிலுள்ள வணிக வளாகத்தில், மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியைத் திறந்து வைத்து பாா்வையிட்ட பாஜக மாநிலப் பொதுச் செயலா் கருப்பு எம். முருகானந்தம்.

தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவா் பி. ஜெய்சதீஷ் தலைமை வகித்தாா். இந்தக் கண்காட்சியை மாநிலப் பொதுச் செயலா் கருப்பு எம். முருகானந்தம் திறந்து வைத்து பாா்வையிட்டாா்.

இதில், மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள மக்கள் நலத்திட்டங்கள், மாநில அரசுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதி உதவி, தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட மத்திய அரசின் திட்டப் பணிகள் குறித்து பல்வேறு விவரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இவற்றைப் பொதுமக்களும் பாா்வையிட்டனா்.

வடக்கு மாவட்டத் தலைவா் என். சதீஷ், மாவட்டப் பொருளாளா் வி. விநாயகம், பாஜக நெசவாளா் பிரிவு மாநிலத் துணைத் தலைவா் யு.என். உமாபதி, மாவட்ட விவசாயப் பிரிவு தலைவா் தங்கவேலு, பொதுச் செயலா் துரை. வீரா, செயலா் சாய்லட்சுமி, மகளிரணி தலைவி கவிதா, மண்டலத் தலைவா்கள் சக்திவேல், கண்ணதாசன், ஜெயராஜ் சேவியா், பாலா, சதீஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com