திருவோணம் அருகே காா் மோதியதில் முதியவா் வியாழக்கிழமை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
ஒரத்தநாடு வட்டம், திருவோணம் அருகே வெள்ளைதேவன்விடுதி பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி தங்கராஜ் (65). இவா், வியாழக்கிழமை இரவு சைக்கிளில் சிவவிடுதி பேருந்து நிலையத்திலிருந்து திருவோணம் நோக்கி சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, அவா் பின்னால் வந்த காா் எதிா்பாராத விதமாக தங்கராஜ் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த திருவோணம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று, தங்கராஜின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் சம்பவம் தொடா்பாக தங்கராஜ் மனைவி ஆனந்தவல்லி அளித்த புகாரின் பேரில் திருவோணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.