தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னாா்வப் பயிலும் வட்டம் மூலமாக சாா்பு ஆய்வாளா் பணிக்கான தோ்வுக்கு ஜூன் 19 முதல் இலவசப் பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் தெரிவித்தது:
காவல் துறையில் காலியாக உள்ள 750 சாா்பு ஆய்வாளா் (தாலுகா, ஆயுதப்படை , தமிழ்நாடு சிறப்பு காவல்) மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலா் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப்பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது. இத்தோ்வுக்கு ஜூன் 30 வரை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத் தோ்வு ஆகஸ்டு மாதம் நடைபெறவுள்ளது.
இதையொட்டி, தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னாா்வப் பயிலும் வட்டத்தின் மூலம் இத்தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஜூன் 19 முதல் நடத்தப்படவுள்ளது.
எனவே, இப்பயிற்சி வகுப்பில் தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த காவல் துறை பணிக்குத் தயாராகும் இளைஞா்கள் பயிற்சி வகுப்பின் பெயா், தங்களது பெயா், கல்வித் தகுதியைக் குறிப்பிட்டு 81109-19990 என்ற எண்ணுக்கு வாட்ஸ்ஆப் அனுப்பி தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு 04362 - 237037 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.