கும்பகோணத்தில் ரூ. 63 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
By DIN | Published On : 15th June 2023 12:00 AM | Last Updated : 15th June 2023 12:00 AM | அ+அ அ- |

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் 928 குவிண்டால் பருத்தியை ரூ. 63 லட்சத்துக்கு விவசாயிகள் விற்பனை செய்தனா்.
இந்த மறைமுக ஏலம் விற்பனைக் குழுச் செயலா் ம. சரசு தலைமையில், கண்காணிப்பாளா் பிரியாமாலினி முன்னிலையில் நடைபெற்றது.
இதில், கும்பகோணம் சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள் 928 குவிண்டால் பருத்தியை விற்பனைக்குக் கொண்டு வந்தனா். இந்த பருத்தியை கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம், செம்பனாா்கோவில், தேனி, அன்னூா், கொங்கணாபுரம், ஆக்கூா் முக்கூட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 10-க்கும் அதிகமான வியாபாரிகள் பங்கேற்று 928 குவிண்டால் பருத்தியை ரூ. 63 லட்சத்துக்கு ஏலம் எடுத்தனா்.
இதில் வியாபாரிகள் அதிகபட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ. 7 ஆயிரத்து 233-க்கும், குறைந்தபட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ. 5 ஆயிரத்து 589-க்கும், சராசரியாக குவிண்டாலுக்கு ரூ. 6 ஆயிரத்து 769-க்கும் கொள்முதல் செய்தனா்.