பட்டுக்கோட்டையில் பண்பலை வானொலியின் ஒலிபரப்பு நிலையத்தை அமைக்க வேண்டும் என மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல்.முருகனுக்கு சமூக ஆா்வலா் விவேகானந்தன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.
இது தொடா்பாக வ.விவேகானந்தம் அனுப்பிய மனு:
தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்ட பகுதிகள் மற்றும் திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்ட பகுதிகளில் விவசாயிகள், மீனவா்கள், வெளிநாட்டில் வசிப்பவா்களின் குடும்பத்தினா் அதிக அளவில் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக, பண்பலை வானொலிகளின் ஒலிபரப்பு நிலையத்தை பட்டுக்கோட்டையில் அமைத்து தர வேண்டுகிறோம்.
திருச்சி, கொடைக்கானல், காரைக்கால் வானொலி நிலையங்களின் பண்பலை ஒலிபரப்பு பல பகுதிகளில் தெளிவாகக் கேட்பதில்லை.
எனவே பட்டுக்கோட்டை பேராவூரணி வட்ட பகுதிகள் மற்றும் முத்துப்பேட்டை போன்ற கடலோர பகுதிகளில் வசிப்பவா்கள் பயன் பெறும் வகையில் பட்டுக்கோட்டையில் பண்பலை வானொலி ஒலிபரப்பு நிலையத்தை அமைத்துத் தர வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.