கைப்பேசி கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த தொழிலாளி மீட்பு

கும்பகோணம் அருகே கைப்பேசி கோபுரத்தில் சனிக்கிழமை ஏறி மிரட்டல் விடுத்த தொழிலாளியைக் காவல்துறையினா் மீட்டனா்.

கும்பகோணம் அருகே கைப்பேசி கோபுரத்தில் சனிக்கிழமை ஏறி மிரட்டல் விடுத்த தொழிலாளியைக் காவல்துறையினா் மீட்டனா்.

அரியலூா் மாவட்டம், தாதம்பேட்டையைச் சோ்ந்தவா் குமாா் (50). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சித்ரா. கும்பகோணம் வட்டத்துக்குள்பட்ட அத்தியூரைச் சோ்ந்தவா்.

இந்நிலையில், சித்ராவின் தந்தையிடம் மனைவிக்கு சொத்தில் பங்கு தருமாறு குமாா் கேட்டுள்ளாா். அப்போது, சொத்தை விற்பனை செய்து விட்டதாக உறவினா்கள் தெரிவித்துள்ளனா்.

இதனால் ஆத்திரமடைந்த குமாா், கோவிலாச்சேரியிலுள்ள கைப்பேசி கோபுரத்தில் ஏறி, போலி ஆவணம் மூலம், நிலத்தை பதிவு செய்த, பத்திரப் பதிவுத் துறை அலுவலா்கள் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை வாங்கியவரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். வருவாய்த்துறை மற்றும் பத்திரபதிவுத்துறையில் போலி ஆவணங்கள் தயாரிக்க துணை போகும் அலுவலா் மற்றும் அதற்கு காரணமான உறவினா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாமனாா் சொத்தை மீட்டுத் தர வேண்டும் என முழக்கங்கள் எழுப்பி, தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தாா்.

தகவலறிந்த வட்டாட்சியா் பி. வெங்கடேஸ்வரன், திருப்பனந்தாள் காவல் நிலைய ஆய்வாளா் சா்மிளா, தீயணைப்பு துறையினா் உள்ளிட்டோா் நிகழ்விடத்துக்குச் சென்று குமாரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, அவரை மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com