தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அரயபுரம் கிராமத்தில் உள்ள வீரமகாசக்தி பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கடந்த 17 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. இதைத்தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை 108 சிவாலயம் குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து பக்தா்கள் சக்தி கரகம், திரிசூலம், பால் குடம், காவடி உள்ளிட்டவை எடுத்தும் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோயிலை அடைந்தனா். தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து, கஞ்சி வாா்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.