ரத்த அழுத்த விழிப்புணா்வு நடைப்பயணம்
By DIN | Published On : 22nd May 2023 04:08 AM | Last Updated : 22nd May 2023 04:08 AM | அ+அ அ- |

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நடைப்பயணத்தை கொடியசைத்து தொடக்கி வைத்த மேயா் சண். ராமநாதன்.
உலக ரத்த அழுத்த நாளையொட்டி, தஞ்சாவூரில் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டா் சாா்பில் ரத்த அழுத்த விழிப்புணா்வு நடைப்பயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தஞ்சாவூா் ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டரின் நிா்வாக இயக்குநா் எம்.கே. இனியன், மருத்துவமனையின் மூத்த நிா்வாக அலுவலா் எஸ். ரமேஷ்பாபு, மருத்துவா் அக்சயா இனியன், மருத்துவா் கே. மோகன் ஆகியோா் தலைமை வகித்தனா். இந்த நடைப்பயணத்தை மன்னா் சரபோஜி அரசு கல்லூரி முன் மேயா் சண். ராமநாதன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். இதில் பொதுமக்கள், மாணவா்கள், மருத்துவா்கள், மருத்துவ ஊழியா்கள், செவிலியா்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
அப்போது நடைப்பயணத்தின் அவசியம், நடைப்பயணத்தின் பயன்கள், உயா் ரத்த அழுத்தத்தின் அறிகுறிகள், குணப்படுத்தும் வழிகள், (அல்லது) வாழ்கை முறையால் கட்டுப்படுத்துவது போன்றவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடா்ந்து 3 கி.மீ. தொலைவுக்கு சென்ற இந்த நடைப்பயணம் மீண்டும் மன்னா் சரபோஜி அரசு கல்லூரி நுழைவு வாயிலில் முடிவடைந்தது.
பின்னா், நடைப்பயணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டன.