தஞ்சாவூரில் 14 இடங்களில் உலா் கழிவு சேகரிப்பு மையங்கள்

தஞ்சாவூா் மாநகரில் 14 இடங்களில் உலா் கழிவு சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா் தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

தஞ்சாவூா் மாநகரில் 14 இடங்களில் உலா் கழிவு சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாநகராட்சியில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளிலிருந்தும் மக்கும், மக்காத குப்பைகள் தரம் பிரித்து பெறப்படுகிறது. வீடுகளில் உள்ள தேவையற்ற பொருள்களை முழுமையாகப் பெறுவதற்காகத் ‘தூய்மை இந்தியா’ திட்டம் 2.0 நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் மாநகராட்சியில் ‘என் வாழ்க்கை என் நகரம்’ என்கிற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, நமது இல்லங்களில் உபயோகப்படுத்த முடியாத பொருள்கள் ஏதேனும் இருந்தால் அதை மாநகராட்சி வசம் ஒப்படைக்கலாம்.

அதாவது, உபயோகப்படுத்த முடியாத புத்தகங்கள், காகிதங்கள், உபயோகமற்ற காலணிகள், பிளாஸ்டிக் பொருள்கள், கண்ணாடி பொருள்கள், பேட்டரிகள், பழுதாகியுள்ள மின் சாதன பொருள்களை மே 20 ஆம் தேதி முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாநகராட்சிக்கு உள்பட்ட கோட்ட அலுவலகங்களில் பொதுமக்கள் ஒப்படைத்து, தங்கள் இல்லங்களில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும். இதற்காக 14 இடங்களில் உலா் கழிவு சேகரிப்பு மையங்கள் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதை ஒரு பெரிய வாய்ப்பாகக் கருதி மாநகரை சுத்தப்படுத்த ஒரு முன்னோடி திட்டமாக பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com