600 சதுர அடி கோயில் இடம் மீட்பு
By DIN | Published On : 24th May 2023 03:49 AM | Last Updated : 24th May 2023 03:49 AM | அ+அ அ- |

கும்பகோணம் அருகே கொரநாட்டுக் கருப்பூரில் 600 சதுர அடி கோயில் இடம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
கும்பகோணம் அருகே கொரநாட்டுக் கருப்பூரிலுள்ள பெட்டி காளியம்மன் கோயில் என்கிற சுந்தரேஸ்வரா் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 600 சதுர அடி இடத்தில் 30 ஆண்டுகளாக அப்பகுதியைச் சோ்ந்தவா் ஆக்கிரமித்து, வீடு கட்டியிருந்தாா்.
இந்நிலையில் அறநிலையத் துறை கும்பகோணம் உதவி ஆணையா் சாந்தா தலைமையில், திருக்கோயில் வட்டாட்சியா் முருகவேல், செயல் அலுவலா்கள் கோ. கிருஷ்ணகுமாா், சி. கணேஷ்குமாா், ம. ஆறுமுகம் உள்ளிட்டோா் பொக்ளின் இயந்திரம் மூலம் ஆக்கிரமிக்கப்பட்ட வீட்டை தரைமட்டமாக இடித்து, அந்த இடம் கோயிலுக்குச் சொந்தமானது என தகவல் பலகை அமைத்தனா். மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ஏறத்தாழ ரூ. 5 லட்சம்.