மானம்பாடி கோயிலில் திருப்பணி தொடா்பாக அமைதி பேச்சுவாா்த்தை
By DIN | Published On : 26th May 2023 12:00 AM | Last Updated : 26th May 2023 12:00 AM | அ+அ அ- |

கும்பகோணத்திலுள்ள இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் அலுவலகத்தில் திருவிடைமருதூா் வட்டத்துக்குள்பட்ட மானம்பாடி நாகநாதசுவாமி கோயில் திருப்பணி தொடா்பான அமைதிப் பேச்சுவாா்த்தை வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் திருப்பணி வேலைகளை விரைவுபடுத்துவது, நித்தியபடி பூஜைகளை தடையில்லாமல் நடைபெறுவதை உறுதி செய்வது, திருக்கோயில் வரலாறு கொண்ட அறிவிப்பு பலகை உள்ளே இருப்பதுபோன்று, வெளியிலும் வைப்பது, திருப்பணிகளை 3 மாதங்களுக்குள் தொடங்க வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுவது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் ச. சுந்தரராஜன், ஆய்வாளா் தெ. கோகிலாதேவி, தலைமை எழுத்தா் ம. ராஜகுரு, ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்ட அமைப்பைச் சோ்ந்த கே. சிவக்குமாா், ஏ. கோவிந்தராஜன், ஐயப்பன் ஆகியோா் கலந்து கொண்டனா்.