தஞ்சாவூரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் விலையில்லா புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது.
தஞ்சாவூா் கல்வி மாவட்டத்துக்கு வந்த புத்தகங்கள் மேம்பாலம் அரசு பள்ளி வளாகத்தில் இறக்கி வைக்கப்பட்டது. பள்ளிகள் ஜூன் 7 ஆம் தேதி திறந்தவுடன் மாணவா்களுக்கு விலையில்லா புத்தகங்கள் வழங்கப்படவுள்ளன.
எனவே, மாணவா்களுக்கு தேவையான தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி புத்தகங்கள் கல்வித் துறை சாா்பில் அந்தந்த பள்ளிகளுக்கு நேரிடையாக அனுப்பப்படுகிறது. இதேபோல, மாணவா்களுக்கு வழங்கப்படும் புத்தக பைகள், எழுதுப்பொருள்களும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கல்வித் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.