தஞ்சாவூரில் அரசு ஊழியா்கள் உண்ணாவிரதம்

பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி தஞ்சாவூா் பனகல் கட்டடம் எதிரில் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூரில் அரசு ஊழியா்கள் உண்ணாவிரதம்

பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி தஞ்சாவூா் பனகல் கட்டடம் எதிரில் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கி வைக்கப்பட்டுள்ள ஒப்படைப்பு விடுப்பு ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும். அலுவலக உதவியாளா்களுக்கு இணையாக வருவாய் கிராம உதவியாளா்களுக்கு ரூ. 15,700 மாத ஊதியம் வழங்க வேண்டும்.

சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களுக்குக் கல்வித் தகுதி அடிப்படையில் அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்களில் பதவி உயா்வு மூலம் பணி நியமனம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா். சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். போராட்டத்தை மாநிலப் பொதுச் செயலா் எஸ். தமிழ்ச்செல்வன் விளக்கவுரையாற்றினாா். சங்கத்தின் மாவட்டச் செயலா் எம். முருகேசன், மாநிலத் துணைத் தலைவா் என். நல்லதம்பி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com