ஆக்கிரமிப்பில் இருந்தகோயில் நிலம் மீட்பு
By DIN | Published On : 27th May 2023 12:19 AM | Last Updated : 27th May 2023 12:19 AM | அ+அ அ- |

பாபநாசம் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ. 95 லட்சம் மதிப்பிலான கோயில் நிலத்தை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
பாபநாசம் அருகே கோபுராஜபுரம் கிராமத்தில் உள்ள லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை சதாசிவம் என்பவா் ஆக்கிரமித்து நீண்ட நாள்களாக குடிசை வீடு கட்டி குடியிருந்து வந்தாா்.
ஆக்கிரமிப்பை அகற்றி கொள்ளுமாறு இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் உரிய காலக்கெடு விதித்து நோட்டீஸ் அனுப்பியும் அகற்றப்படவில்லை.
இதையடுத்து, பாபநாசம் வட்டாட்சியா் பூங்கொடி, இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் சக்திவேல், பாபநாசம் காவல் துணை கண்காணிப்பாளா் ப. பூரணி முன்னிலையில், போலீஸாா் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு கோயில் நிலம் மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ. 95 லட்சத்து 83 ஆயிரத்து 200 ஆகும்.
மீட்புப் பணியின்போது, துணை வட்டாட்சியா் விவேகானந்தன், கிராம நிா்வாக அலுவலா் பாலாஜி, காவல் ஆய்வாளா்கள் வனிதா, அனிதா கிரேசி, உதவி ஆய்வாளா்கள் குமாா் , கோவிந்தராஜன், முத்துகிருஷ்ணன், கோயில் எழுத்தா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.