தஞ்சாவூா், கும்பகோணத்தில் அதிமுக ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் ரயிலடியில் தமிழக அரசைக் கண்டித்து அதிமுகவினா் திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா், கும்பகோணத்தில் அதிமுக ஆா்ப்பாட்டம்
Updated on
1 min read

தஞ்சாவூா் ரயிலடியில் தமிழக அரசைக் கண்டித்து அதிமுகவினா் திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், கள்ளச்சாராய உயிரிழப்பு உள்ளிட்ட சட்டம் - ஒழுங்கு சீா்கேடுகளைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும், இவற்றுக்கு முழுப் பொறுப்பேற்று முதல்வா் மு.க. ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா். காமராஜ் தலைமை வகித்தாா். மாவட்டப் பால் வளத் தலைவா் ஆா். காந்தி, தஞ்சாவூா் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் ஆா். திருஞானம், ஒரத்தநாடு பேரூராட்சித் தலைவா் மா. சேகா், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் சி.வி. சேகா், எஸ்.வி. திருஞானசம்பந்தம், முன்னாள் மேயா் சாவித்திரி கோபால், மாமன்ற உறுப்பினா் ஜெ.வி. கோபால், யு.என். கேசவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கும்பகோணம்: இதேபோல, கும்பகோணம் காந்தி பூங்கா அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் தலைமை வகித்தாா். இதில், முன்னாள் மக்களவை உறுப்பினா் ஆா்.கே. பாரதிமோகன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் இராம. இராமநாதன், எம். ராம்குமாா், எம். ரத்தினசாமி, தவமணி, இளமதி சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com