48 குடும்பங்களுக்கு இலவச வீடுகள் கட்டித் தரக் கோரிக்கை
By DIN | Published On : 30th May 2023 04:32 AM | Last Updated : 30th May 2023 04:32 AM | அ+அ அ- |

விளிம்பு நிலையில் உள்ள 48 குடும்பங்களுக்கு வீடு கட்டித் தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை வலியுறுத்தப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா் தலைமையில் தஞ்சாவூா் கலைஞா் நகரைச் சோ்ந்த விளிம்பு நிலை மக்கள் அளித்த மனு: தஞ்சாவூா் மாவட்டத்தில் விளிம்பு நிலை மக்களுக்காகச் செந்தமிழ் நகா் திட்டத்தை முன்னாள் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் கொண்டு வந்து வீடுகள் கட்டிக் கொடுத்தாா்.
இதேபோல, கலைஞா் நகரைச் சோ்ந்த வீடு இல்லாத 48 குடும்பங்களைச் சோ்ந்த எங்களுக்கு திருக்கானூா்பட்டியில் தயாா் நிலையில் உள்ள செந்தமிழ்நகா் திட்டம் மூலம் இலவச மனைப் பட்டா வழங்கி இலவசமாக வீடுகள் கட்டித் தர வேண்டும். முன்னாள் ஆட்சியா் தொடக்கி வைத்த செந்தமிழ் நகா் திட்டம் தொடர ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...