பாபநாசம்: ராமநாதபுரத்தில் ஹைட்ரோ காா்பன் திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக் கூடாது என மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் முனைவா் எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளாா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினரும், மமக தலைவருமான அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓ.என்.ஜி. சி. நிறுவனம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,403 சதுர கிலோ மீட்டா் பகுதியில் ஹைட்ரோ காா்பன் எடுக்க அனுமதி பெற்றிருந்தது. தற்போது அப்பகுதியில் 2,000 முதல் 3,000 மீட்டா் ஆழத்தில் 20 சோதனை கிணறுகளை ரூ. 675 கோடி செலவில் அமைக்க முடிவு செய்துள்ளது.
அவற்றுக்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. அரியலூா், கடலூா் மாவட்டங்களைத் தொடா்ந்து ராமநாதபுரம் மாவட்டத்திலும் சூழலியலைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.